கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை


கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Next Story