அரியலூரில் வடிகால் குழாய்க்குள் சிக்கிய நாய்க்குட்டிகளை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்
கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் கரடிக்குளம் கிராமத்தில் நீர் வடிகாலுக்காக சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் போடப்பட்டிருந்தது. இந்த குழாய்க்குள் நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அதன் பிறகு பெய்த மழையால், குழாய்க்குள் தண்ணீர் சென்ற நிலையில், நாய்க்குட்டிகள் குழாய்க்குள் சிக்கிக் கொண்டன.
குட்டி நாய்களின் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், அவற்றை மீட்க வழி தெரியாமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கயிற்றைக் கட்டி குழாய்க்குள் சென்று, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த குட்டிகளை அதன் தாய் நாயுடன் சேர்த்தனர். நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதற்காக தீயணைப்புத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.