பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


பட்டாசு ஆலை விபத்து: விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
x

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை,

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் கடந்த 17-ந் தேதி ரசாயன மருந்துகள் வைத்திருந்த அறையில் உராய்வினால் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். வெடிவிபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து தொடர்பாக ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை (38) போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், இதுதொடர்பாக விருதுநகர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


Next Story