கருவேப்பிலைப்பாளையம்தர்மராஜ திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


கருவேப்பிலைப்பாளையம்தர்மராஜ திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜ திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா் நடைபெற்றது.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மராஜ திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் 22 நாட்கள் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, இரவில் சாமி வீதிஉலா மற்றும் பக்காசூரன் திருவிழா நடைபெற்றது.

விழாவில் நேற்று முன்தினம் அரவாண், வீரபத்திரன் சாமி வீதி உலாவும், 10 மணிக்கு அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும் நடைபெற்றது. மாலையில், தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர். விழாவில் நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது. இன்று தர்மர் பட்டாபிஷேகம், தெப்ப திருவிழா, காவபூஜைகளும் நடைபெறுகின்றது.


Next Story