நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு
இன்று பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதால் நாளை ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
சென்னை,
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது, ரமலான் மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. முன்னதாக ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்கின்றனர்.
இதன்படி நடப்பாண்டு தமிழகத்தில் மார்ச் 23-ந்தேதி மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 8-ந்தேதி இரவு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள், 18-ந்தேதி 'பெரிய இரவு' என அழைக்கப்படும் 'லைலத்துல் கதர்' இரவு ஆகிய நாட்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு கொழுகை நடத்தினர்.
இதையடுத்து 21-ந்தேதி(இன்று) இரவு 'ரமலான் ஈத்' சந்தேக நாள் என குறிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிறை தென்பட்டதால், நாளைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story