இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் - பெண் எஸ்.ஐ.சஸ்பெண்ட்


இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் - பெண் எஸ்.ஐ.சஸ்பெண்ட்
x

கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாப்பாநாட்டு பகுதியில் உள்ள மக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சில வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்கள் மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று பெண் எஸ்.ஐ சூர்யாவை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பாப்பாநாட்டு பகுதியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். நிவாரண உதவி மட்டுமல்லாது அவருக்கு அரசாங்க வேலையும் கொடுக்க வேண்டும். புகாரை அலட்சியமாக விசாரித்த காவல்துறை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பெண் எஸ்.ஐ சூர்யாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story