தவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம்


தவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம்
x

தவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் (பி.எம்.கிசான் திட்டம்) ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 13 தவணைகளில் மொத்தம் ரூ.26 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 14 தவணை விடுவிக்க விவரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவு செய்தல் (இ-கேஒய்சி) கட்டாயம் ஆகும். ஆதார் எண்ணை பதிவு செய்தால் தான் பணம் வங்கி கணக்குக்கு வரும். ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் உடனடியாக இ-கேஒய்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தையோ, தபால் நிலையத்தையோ அணுகி புதுப்பித்து கொள்ளலாம். அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தில் இன்னும் 9 ஆயிரத்து 189 பேருக்கு இ-கேஒய்சி முடித்தவுடன் வழங்கப்பட்டு விடும். விவசாயிகளுக்கு ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் வேளாண்மை அலுவலரை 8760832224 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மேற்கண்ட விவசாயிகளும் உடனடியாக (14 வது தவணை விடுவிப்பதற்கு முன்) இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story