கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய விவசாயிகள் கூட்டமைப்பு


கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய விவசாயிகள் கூட்டமைப்பு
x

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

காவிரி, வைகை, கிருதுமால் நதி, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால் நதி, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இத்திட்டத்திற்கு ரூ. 760 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், தற்போது பொது நிதிநிலை அறிக்கையிலும், விவசாய நிதிநிலை அறிக்கையிலும், இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் 7 மாவட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், 8 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.


Next Story