மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி-மின்வாரியம் எச்சரிக்கை


மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி-மின்வாரியம் எச்சரிக்கை
x

மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி பரப்பபடுவதால் நுகர்வோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

நுகர்வோர்கள் ஜாக்கிரதை. தூண்டிலில் சிக்க வேண்டாம். இது மின்கட்டண மோசடியின் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ 03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர்.

பதட்டப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnebltd.gov.inமற்றும் செயலியில் சரிபார்க்கவும். எஸ்.எம்.எஸ். வாயிலாக வந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எஸ்.எம்.எஸ் வந்த எண்ணை அழைக்க வேண்டும். இதுதொடர்பாக, சைபர் குற்ற எண் 1930 ல் புகார் அளிக்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story