விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு

தியாகதுருகத்தில் விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறித்த 2 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). விவசாயி. இவர் நேற்று தியாகதுருகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது செலவுக்காக ரூ.13 ஆயிரம் எடுத்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராமசாமியிடம் இருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் பணம் பறித்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





