கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு" - அரசு உத்தரவு
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமானோர் இறந்தனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும் அவர்களும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.