திருக்கோளூரில் அகழாய்வு பணி தொடங்கியது


திருக்கோளூரில் அகழாய்வு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணி தொடங்கியது

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணி தொடங்கியது.

பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிய...

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற அகழாய்வில் ஏரளாமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டன.

தொடர்ந்து பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் அருகில் உள்ள கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர், அகரம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

அகழாய்வு தொடங்கியது

அதன்படி திருக்கோளூர் சேர சோழ பாண்டீசுவரர் கோவிலுக்கு பின்புறம் நேற்று அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ், தாசில்தார் கண்ணன் ஆகியோர் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தனர்.

அங்கு முதல்கட்டமாக 2 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு மேற்கொள்ளவும், பின்னர் அகழாய்வை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஓராண்டு அகழாய்வு பணிகள் நடைபெறும் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துகுமார், தொல்லியல் பொறியியல் உதவி மேற்பார்வையாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், திருக்கோளூர் பஞ்சாயத்து தலைவர் பிரபஞ்சன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story