முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...!
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கனவே, கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்துள்ளார். தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.

1 More update

Next Story