சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் வேண்டும்


சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் வேண்டும்
x

சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் வேண்டும் என நீதிபதி கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அய்யநாடாா்- ஜானகி அம்மாள் கல்லூரியில் மகளிருக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அசோக் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரை விஜயபாஸ்கர நாயுடு அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லிபுத்தூா் சாா்பு நீதிபதி மோகனா கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அடிப்படை சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். சட்ட விழிப்புணா்வு இல்லாதவா்கள் வாழ்க்கையில் நிலை தடுமாறுகின்றனா். பெண் சிசுக்கொலை தடுப்புச்சட்டம் 1994-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதேபோல் 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் பாலியல் வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் தடுப்பு (போக்சோ) சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது. காவலன் உதவி செயலி அனைவரிடமும் இருக்க வேண்டும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் வரதட்சணைக்கொடுமை, உடல் ரீதியான, மனரீதியான துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை சட்டரீதியாக எதிா்கொண்டு தீா்வு காணலாம். பெண்கள் சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பெண்கள் தன்னம்பிக்கை, துணிச்சல், தைரியம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்றாா். முடிவில் உதவிப்பேராசிரியை ஞானசந்திரா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story