ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள்


ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள்
x

ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள ஓட்டேரி ஏரியில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தாமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். ஓட்டேரி ஏரியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

விழாவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 100 சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சமீபத்தில் 2022-ம் ஆண்டில், தமிழ்நாடு 20 ஆண்டுகளுக்கு பிறகு 13 புதிய ராம்சார் தளங்களை பெற்றுள்ளது. ரூ.115 கோடியே 15 லட்சம் மதிப்பில் 100 ஈர நிலங்களில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) சுப்ரியா சாகு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், முதன்மை தலைமை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்ர, வனஉயிரின காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, தமிழ்நாடு ஈர நில இயக்கம் தீபக் ஸ்ரீவஸ்தவா, செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ்நாடு ஈர நிலம் இயக்கம் தொடர்பான ஆவணப்படம், தகவல் கையேடு வெளியிடப்பட்டது.


Next Story