கள்ளிப்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம்
நீலக்குறிஞ்சி மலர்களை பார்வையிட சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க சாந்தம்பாறை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மூணாறு,
சாந்தம்பாறை அருகே உள்ள கள்ளிப்பாறை பகுதியில், 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. கண்களை கொள்ளை கொள்ளும் இந்த பூக்களை, கடந்த 10 தினங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். தற்போது நீலக்குறிஞ்சி மலர்களை பார்வையிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே நீலக்குறிஞ்சி மலர்களை பார்ப்பதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க சாந்தம்பாறை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது.
தினமும் காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீலக்குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என்று கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story