குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்


குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்
x

மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிஸ்கட் வழங்கும் திட்டம்

விருதுநகர் தர்காஸ் தெருவில்அங்கன்வாடி மையத்தில் 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தினை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்கின்ற குறிக்கோள் கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 24 மாதம் உள்ள குழந்தைகளுக்கு 1½ கிலோ, 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு 750 கிராம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 6 வயது முதல் 6 வயது உள்ள குறைவான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 2 ஆயிரத்து 477 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்


Next Story