ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு


ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு
x

ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பன்னீர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேதாஜி தினந்தோறும் கல்லூரிக்கு மதுராந்தகத்தில் இருந்து ரெயில் பயணமாக சென்று வந்தார்.

கடந்த 22-ந்தேதி காலை மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த விழுப்புரம் பாசஞ்சர் ரெயிலில் ஏற முயன்றார். அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால் ஒடிச்சென்று ரெயிலில் ஏற முயன்றார்.அப்போது ரெயில் வேகமாக செல்லவே கைப்பிடி நழுவி ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் நேதாஜி விழுந்து விட்டார். இதில் அவரது 2 கால்களும் முழுவதுமாக ரெயில் சக்கரத்தில் சிக்கி நசுங்கி போனது. அங்கு இருந்த ரெயில் பயணிகள், ரெயில்வே ஊழியர்கள் சத்தம் போடவே உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story