என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்


என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
x

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

"என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்" என பெயர் பெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2003-ல் சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார். 2013-ம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின்போது எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டார். ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார்.

தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story