இந்தியா முழுவதும் 57 கண்டோன்மெண்ட் பகுதிகளில் தேர்தல் - மத்திய அரசு அனுமதி


இந்தியா முழுவதும் 57 கண்டோன்மெண்ட் பகுதிகளில் தேர்தல் - மத்திய அரசு அனுமதி
x

இந்தியா முழுவதும் சுமார் 57 கண்டோன்மெண்ட் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 64 கண்டோன்மெண்ட் பகுதிகள் உள்ளன. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 57 கண்டோன்மெண்ட் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் மற்றும் சென்னை பல்லாவரம் ஆகிய 2 கண்டோன்மெண்ட் பகுதிகளில் வரும் ஏப்ரல் 30-ந்தேதி தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் 7 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 6 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story