நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு இன்று தேர்தல்


நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு இன்று தேர்தல்
x

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதம் ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் (ஆக. 5) இன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார்.

இதற்கிடையே, நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து அவர் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.


Next Story