வீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் சாவு - ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைப்பு
தாம்பரம் அருகே வீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
சென்னை
சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கத்தில் 137 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆக்கிரமிப்பு வீடுகள் பெருமளவு இடிக்கப்பட்டது. இந்தநிலையில் மீதமுள்ள வீடுகளை நேற்று இடிக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் இரவே மீதமுள்ள வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். 2-வது முறையாக மீண்டும் வருவாய்த்துறையினர் வீடுகளை இடிக்க வருவதாக அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி கோவிந்தம்மாள் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதனால் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story