"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்
'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
Live Updates
- 20 March 2023 10:53 AM IST
சர்வதேச தரத்தில் சென்னையில் விளையாட்டு மையம்
சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும்
- 20 March 2023 10:52 AM IST
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 500 கோடி ரூபாயில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்
- 20 March 2023 10:50 AM IST
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்
- 20 March 2023 10:43 AM IST
தஞ்சையில் சோழர் அருங்காட்சியம்
சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- 20 March 2023 10:41 AM IST
ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய கட்டிடம்
வட சென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனையில் 147 கோடி ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்படும்
- 20 March 2023 10:40 AM IST
ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி உயர்வு
ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி 20 லட்ச ரூபாயில் இருந்து 40 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது
- 20 March 2023 10:39 AM IST
இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்
இலங்கை தமிழர்களுக்கு 3 ஆயிரத்து 949 வீடுகள் 223 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்
- 20 March 2023 10:37 AM IST
நிதி பற்றாக்குறை குறைவு
திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக மத்திய அரசை காட்டிலும் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றக்குறை 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது
- 20 March 2023 10:36 AM IST
அம்பேத்கரின் நூல்கள் மொழிபெயர்ப்பு:
அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்