"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்
'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
Live Updates
- 20 March 2023 10:35 AM IST
மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- 20 March 2023 10:28 AM IST
மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம்-நிதியமைச்சர் பழனிவேல்
திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம்
* வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது -நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- 20 March 2023 10:03 AM IST
தமிழ்நாடு பட்ஜெட்டை நிதிமந்திரி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்
- 20 March 2023 10:00 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்துள்ளார்.
- 20 March 2023 9:59 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 20 March 2023 9:58 AM IST
தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுகிறார்.