பூம்புகார் அருகே வானகிரி ரேணுகாதேவி கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு


பூம்புகார் அருகே வானகிரி  ரேணுகாதேவி கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:30 AM IST (Updated: 6 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே வானகிரி ரேணுகாதேவி கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் ரேணுகா தேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் மற்றும் திரளான பெண்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். இதனை அடுத்து விநாயகர், சுப்பிரமணியர், அய்யப்பன், காளியம்மன் மற்றும் ரேணுகாதேவி எல்லை அம்மன் ஆகிய சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து ராணுவ துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர் வீரவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது அவரிடம் கிராம பிரமுகர்கள் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மனுக்கள் அளித்தனர். அவருடன் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story