பருவமழையையொட்டி ஆரணி ஆற்றில் பாய்ந்து வரும் நீரால் - நிரம்பி வழியும் சுருட்டப்பள்ளி தடுப்பு அணை


பருவமழையையொட்டி ஆரணி ஆற்றில் பாய்ந்து வரும் நீரால் - நிரம்பி வழியும் சுருட்டப்பள்ளி தடுப்பு அணை
x

வடகிழக்கு பருவமழையையொட்டி ஆரணி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து வருவதால் சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பி வழிகிறது.

திருவள்ளூர்

வடகிழக்கு பருவமழையையொட்டி ஆரணி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து வருவதால் சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பி வழிகிறது.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுப்பாநாயுடுகண்டிகை, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்பெறவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் தடுப்பு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, 1954-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் மீது தடுப்பு அணை கட்டப்பட்டது. ரூ.6.40 லட்சம் செலவில் 158 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட இந்த தடுப்பணையில் 10 அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி நந்தனம் காட்டுப்பகுதியில் உள்ள ஓடைகளின் தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வருகிறது. இதனால் சுருட்டப்பள்ளியில் உள்ள தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story