வயல்களில் மழைநீர் தேங்கியதால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
வயல்களில் மழைநீர் தேங்கியதால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
வங்கக்கடலில் தீவிர புயலாக உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு 9 மணி முதல் மெதுவாக கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அதிகாலை 3 மணிக்கு மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடந்தது. மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சூரிய நகரம், கிருஷ்ணசமுத்திரம், எஸ்.அக்ரஹாரம், சிறுகுமி, தாடூர், மத்தூர், மாமண்டூர், நெமிலி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்டஏக்கரில் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சேதம் அடைந்த நெற்பயர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story