பெண்ணை அவதூறாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை


பெண்ணை அவதூறாக பேசிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை
x

கடன் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகள் பேசியதால் மன உளைச்சலடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கடன் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகள் பேசி, கைபேசியை பிடுங்கி சென்றதால், மன உளைச்சலடைந்த பெண், தற்கொலை செய்துக்கொண்டார்.

கரிமலைப்பாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேலாயுதம் மற்றும் பத்மா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வேலாயுதம் விபத்தில் இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகள் திருமண செலவிற்காகவும், மகன் படிப்பிற்காகவும் தனியார் நிறுவனத்தில் பத்மா கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

மாதந்தோறும் கட்டப்படும் தவணை ஒரு சில மாதங்களாக தவறியதால், பத்மா வீட்டிற்கு கடந்த 21-ம் தேதி வந்த இரு நிதி நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்கள், அவரை அவதூறாக பேசியுள்ளனர். மேலும், பத்மா வைத்திருந்த கைபேசியை பிடுங்கி சென்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இதற்கு காரணமான தனியார் நிறுவன ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story