திருவாலங்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாலங்காட்டில் நடந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கிஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசும்போது,
திருவலாங்காடு அரசு மேல்நிலைபள்ளியில் சேதமடைந்த கட்டிடங்கள் இந்த ஆண்டிற்குள் புனரமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு வட்டாரம் பின் தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக குழந்தைகளின் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை திருமணம் போன்றவை அதிக அளவில் திருவலாங்காட்டில் நடைபெறுகிறது.
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட காவல் துறையும், வருவாய்த்துறையும் இணைந்து அதிகாரிகள் அனைத்து பள்ளிகளிலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளுக்கு ஆய்வு செய்து, போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். நிகழ்ச்சியில், முன்னதாக கலெக்டர் தலைமையில் மாணவ-மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமன், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் பவித்ரா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.