'தினத்தந்தி' செய்தி எதிரொலி:'மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தில் தூர்வாரும் பணி


தினத்தந்தி செய்தி எதிரொலி:மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தில் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 30 Aug 2023 12:45 AM IST (Updated: 30 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

திருவாரூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

ஜெயங்கொண்டநாதர் கோவில்

மன்னார்குடி பாமணி ஆற்றின் வடகரையில் ஜெயங்கொண்டநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜனின் பேரனான ராஜாதிராஜன் போருக்கு செல்லும் முன் வெற்றி (ஜெயம்) கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கோவிலை கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. இந்த கோவில் எதிரிலேயே குளம் அமைந்துள்ளது.

கோவில் குளத்தை சுற்றி புதராக செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. குளத்தின் படித்துறையும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து குளத்தை தூர்வாரி, படித்துறையை சீரமைக்க வேண்டும் என 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது.

குளத்தை தூர்வாரும் பணி

இதன் எதிரொலியாக தற்போது ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தூர்வார நடவடிக்கை எடுத்த நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story