திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
சிவகிரியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி தனியார் மண்டபத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கை யு.எஸ்.டி.சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் பூ.ஆறுமுகசாமி வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் கோ.வி.லெனின், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஆகியோர் பேசினர்.
மாவட்ட துணை செயலாளர் மனோகரன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர்கள் ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் பாலசுப்பிரமணியன், புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவி கோமதிசங்கரி சுந்தர வடிவேலு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, புளியங்குடி அந்தோணிசாமி, ராயகிரி விவேகானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.