திரவுபதி அம்மன் வீதி உலா


திரவுபதி அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் திரவுபதி அம்மன் வீதி உலா நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தேவூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி பெருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதி உலா காட்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. சாமி வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

1 More update

Next Story