மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாட வேண்டாம் - வைரமுத்து


மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாட வேண்டாம் - வைரமுத்து
x
தினத்தந்தி 4 Dec 2023 2:15 AM IST (Updated: 4 Dec 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

நேற்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை,

உலகம் முழுவதும் நேற்று மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாள் கொண்டாடப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை எள்ளி நகையாட வேண்டாம். ஏனென்றால், வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒவ்வொரு மனிதனும் மாற்றுத் திறனாளியாகிறான். அவர்கள் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால்தான் அவர்களின் துன்பமும் பெருமையும் துலக்கமாகும்.

இச்சூழலில் 1997-ம் ஆண்டில் வெளியான 'பொற்காலம்' படத்தில் நான் எழுதிய 'ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ...' பாடலை மாற்றுத் திறனாளிகளுக்குக் காணிக்கை செய்கிறேன். சேரன், தேவா, வடிவேலு மூவர்க்கும் நன்றி சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் அந்தப் பாடலை தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story