ஏழை மக்கள் பணத்தில் கார் பந்தயம் தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி


ஏழை மக்கள் பணத்தில் கார் பந்தயம் தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தும், ரூ.72.85 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் மத்திய பகுதியில் ஏன் கார் பந்தயம் நடத்த வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த மைதானத்தில் கார் பந்தயம் நடத்தலாமே?. விளையாட்டுத்துறை அமைச்சர் மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டு செய்கிறார்.

மக்கள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் கார் பந்தயத்தில் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டியது அவசியமா?. மக்களின் வரிப்பணத்தில் ரூ.42 கோடி செலவில் கார் பந்தயம் நடத்தப்படுகிறது. ஏழை மக்கள் பணத்தில் கார் பந்தயம் தேவையா?. மக்களின் பணம், மக்களுக்கு போய் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story