தி.மு.க. அரசின் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்


தி.மு.க. அரசின் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 19 Sept 2023 6:45 PM (Updated: 19 Sept 2023 6:45 PM)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசின் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி ஒன்றியத்தில் வடக்கு அண்டக்குடி, பெருமச்சேரி, நாகமுகுந்தன்குடி, தடியமங்கலம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் விடுபட்ட மகளிர் உரிமைத்தொகை, தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, தொடக்க வேளாண்மை சங்க தலைவர் சுபா தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி என்ற சாருஹாசன், தெட்சிணாமூர்த்தி, செயலாளர்கள் சோலை ராஜ், கண்ணன், ராஜகோபால், சேகர், வினோத், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட பெண்கள் மனுக்கள் செய்ய வழிமுறைகள், தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

1 More update

Next Story