தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் ரெயிலில் பயணம்...!


தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் ரெயிலில் பயணம்...!
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 லட்சம் பேர் ரெயில் பயணம் மூலம் சொந்த ஊருக்கு சென்றுன்ளனர்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கைளை சேர்ந்த ஏராளமானோர் தொழில், வியாபாரம், கல்வி என்று தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை கலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பஸ்களில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்தது. இதனால் சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

இந்த நிலையில், சென்னையில் இருந்த பல்வேறு ஊர்களுக்கு 6 லட்சம் பேர் ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதின்படி, தீபாவளியை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து 6 லட்சத்தி 1,288 பேர் ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

1 More update

Next Story