வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும் (பொறுப்பு) மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கல்பாடியில் 27 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலான குளம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.15½ லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளதையும், குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். இதையடுத்து அவர் கல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த ரேஷன் கடை, குழந்தைகள் மையத்தினையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story