மாவட்ட அளவிலான கபடி போட்டி


மாவட்ட அளவிலான கபடி போட்டி
x

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே பில்லூரில் கிராம பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவில் ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில், கோவை, சென்னை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகளின் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், முதல் பரிசை கோவை பி.ஜே. பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 2-வது பரிசை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்டார் அகாடமி அணியும், 3-வது பரிசை திருச்சி மாவட்டம் பொன்னுரெங்கபுரம் பெரியசாமி நினைவு கபடி அணியும், 4-வது பரிைச கரூர் மாவட்டம் திம்மாச்சிபுரம் அண்ணா சிட்டி போலீஸ் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசும், கோப்பையும், சிறந்த வீரர், சிறந்த பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியை கபடி வீரர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

1 More update

Next Story