மாநாட்டிற்கு மேடை அமைப்பது தொடர்பாக பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே பிரச்சினை


மாநாட்டிற்கு மேடை அமைப்பது தொடர்பாக பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே பிரச்சினை
x

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாநாட்டிற்கு மேடை அமைப்பது தொடர்பாக பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது.

கரூர்

பா.ஜ.க.வினர் ஆயத்தம்

கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கரூர் மாற்றத்திற்கான மாநாடு நாளை (சனிக்கிழமை) கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மாநாடு நடத்த கரூர் மாநகராட்சியை அணுகியபோது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என தெரிகிறது. பின்னர் பா.ஜ.க.வினர் நீதிமன்றத்தின் மூலம் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதி பெற்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாநாட்டிற்கான மேடை மற்றும் தடுப்புகள் அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கு பா.ஜ.க.வினர் ஆயத்தமாகினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் 29-ந்தேதி (ேநற்று) மைதானத்தில் கலைஞரின் நூற்றாண்டு விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அனுமதி பெற்று உள்ளதாக கூறினர். இதனால் பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். பின்னர் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எழுதி கொடுத்த அதிகாரிகள்

அப்போது, பா.ஜ.க. சார்பில் 1-ந்தேதி தான் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 29-ந்தேதி (அதாவது ேநற்று) தி.மு.க.வினர் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி பெற்று இருந்தனா். எனவே பா.ஜ.க.வினர் நாளை அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வந்து மாநாட்டிற்கான ஆயத்த பணிகளில் ஈடுபடலாம் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பா.ஜ.க. வினர் எழுத்துப் பூர்வமாக எழுதி ெகாடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினர். பின்னர் அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் மாநாட்டிற்கான மேடை அமைக்க கொண்டு வந்த பொருட்களை அங்கிருந்து எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிைடயில் ேநற்று கரூா் திருவள்ளுவா் விளையாட்டு ைமதானத்தில் தி.மு.க. சார்பில் விளையாட்டு போட்டி நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story