விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்


விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2023 12:30 AM IST (Updated: 4 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உத்தபிரதேசம் மாநிலம் லக்கம்பூரில் விவசாயிகள் பேரணியில் கார் மோதி 4 விவசாயிகள் இறந்த வழக்கில் ஆசிஷ் மிஷ்ராவை கைது செய்ய வேண்டும். அவரின் தந்தை மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர்.

கோஷங்கள்

போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டியு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. பாலசிங்கம், எல்.பி.எப் முருகன், ஐ.என்.டி.யு.சி ராஜகோபாலன், எச்.எம்.எஸ். ராஜ்குமார், ஏ.ஐ.சி.சி.டி.யு. சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், ஏ.ஐ.டி.யு.சி. கிருஷ்ணராஜ், எல்.பி.எப். சுசி.ரவீந்திரன், எச்.எம்.எஸ். துறைமுகம் சத்யா, ஏ.ஐ.சி.சி.டி.யு சிவராமன், எஸ்.கே.எம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story