சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் சட்ட ஒழுங்கு கெடும் வாய்ப்பு - டிஜிபி சைலேந்திரபாபு கவலை


சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் சட்ட ஒழுங்கு கெடும் வாய்ப்பு - டிஜிபி சைலேந்திரபாபு கவலை
x

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் சட்ட ஒழுங்கு கெடும் வாய்ப்புள்ளாதாக டிஜிபி சைலேந்திரபாபு கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் ஓய்வு பெற உள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு கெடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மனிதநேயத்துடன் காவல்துறை பொதுமக்களிடம் நடக்க வேண்டும் என்பதற்காக 2,300 காவல்நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் புகார்கள் கனிவுடன் பெறப்படுகின்றன. ஏற்கனவே காவல்துறை இணைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,000 ஆக இருந்தது. தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த 8 மாதங்களில் தமிழ்நாடு காவல் நிலையத்தில் எந்த மரணமும் நிகழவில்லை" என்று அவர் கூறினார்.


Next Story