ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
கோயம்புத்தூர்
புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றுக்கு கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story