பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்


பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
x

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பள்ளூர் கிராமத்தில் உள்ள வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நெய் தீப வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக வராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதில் நெமிலி, அரக்கோணம், காஞ்சீபுரம், பனப்பாக்கம், ஓச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story