தனுஷ்கோடியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
ராமநாதபுரத்திற்கு கடந்த 4 மாதங்களில் 1.70 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே நடராஜபுரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமையவுள்ள இடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ராமநாதபுரத்திற்கு கடந்த 4 மாதங்களில் ஒரு கோடியே 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ராமச்சந்திரன், தனுஷ்கோடியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், மேலும் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story