மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்


மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 24 Aug 2022 12:45 AM IST (Updated: 24 Aug 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல்ஆனந்த், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துறை அலுவலர்கள் தங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அரசுத்துறைகளின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்ற சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

காலதாமதமின்றி

இ-சேவை மையங்களில் அரசின் சேவைகள் காலதாமதமின்றி உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஒவ்வொரு அலுவலரும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு நடத்தினார். இதில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story