தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை...!


தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை...!
x

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேவர் குருபூஜை விழாவையொட்டி, சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story