விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணம்: போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு


விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணம்: போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு
x

விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தவிட்டது.

சென்னை

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரை திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணையின்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராஜசேகர் மரணம் அடைந்தார்.

போலீஸ் சித்ரவதையினால்தான் அவர் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். பின்னர், விசாரணை கைதி மரணம் குறித்து 4 வாரத்துக்குள் சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

1 More update

Next Story