பட்டாசு ஆலை வெடி விபத்து - விதிமீறல் கண்டுபிடிப்பு


பட்டாசு ஆலை வெடி விபத்து - விதிமீறல் கண்டுபிடிப்பு
x

சட்ட விரோதமாகவும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விபத்து நடந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி, அரசு உரிமம் பெற்ற கட்டிடத்திற்குள் பட்டாசுகள் தயாரிக்காமல் கட்டிடத்தில் வெளியே பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்துள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாகவும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக ஊழியர்களை கொண்டு பட்டாசு தயாரித்ததால் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பட்டாசுகள் தயாரித்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story