மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக தொடர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து, கடந்த 4 ஆம் தேதி திடீரெனெ அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் எதிரொலியாக மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடர் சாரல் மழை பெய்து வந்தது.
இதையடுத்து மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி திடீரெனெ அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இன்று 3-வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு காணப்படுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story