பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக முற்றிலும் தன்னார்வல முறையில் செயல்படுத்தப்படும் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் (2023-2024-ம் நிதியாண்டு) அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா வரவேற்றார். இதில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாத வர்களின் கணக்கெடுப்பு பணியினை தொடங்க தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் 40 மையங்களில் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு 40 தன்னார்வலர்களை கொண்டு புதிய பாரத எழுத்தறிவு மையங்கள் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ராதிகா நன்றி கூறினார்.